சென்னை, புரசைவாக்கத்தில் பிறந்து வளர்ந்த ஆரோக்கியசாமி க்ளமென்ட், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியில் முடித்தார்.

Advertisment

usa to kodambakkam

திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டிருக்கிறார். சில காரணங்களால் அது முடியாமல் போனாலும், தனது சினிமா முயற்சியை கைவிடாதவர், தனது வீடு இருக்கும் தெருவில் வசித்த நடிகர் லிலிவிங்ஸ்டன் உதவியால் பல படப்பிடிப்புகளுக்குச் சென்றவர், அவரின்மூலம் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் அறிமுகத்தைப் பெற்றவர், விஜயின் "குஷி' படத்தில் சிறு வேடம் ஒன்றில் நடித்தார்.

இருப்பினும் உதவி இயக்குநராக சேரவேண்டும் என்ற தனது கனவுடன் கோடம்பாக்கத்தில் வலம்வந்து, "ஹேராம்', "பிரண்ட்ஸ்', "தீனா', "இனிது இனிது காதல் இனிது', "மனதை திருடி விட்டாய்' என பல படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்தார். பிறகு "விருமாண்டி' படத்தில் கமல்ஹாசனின் நண்பராக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த நேரத்தில் தனது மனைவிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் அவருடன் அமெரிக்கா செல்லவேண்டிய கட்டாயம்.

Advertisment

அமெரிக்கா சென்றாலும் சினிமாமீது தனக்குள்ள ஆர்வத்தைக் கைவிடாமல், அங்கேயே பல குறும்படங்களை இயக்கினார். ஒரு வருடம் அமெரிக்காவில் இருக்கும் தனது குடும்பத்தைப் பிரிந்து, சென்னையில் இருந்தபடியே "முடிவில்லா புன்னகை' படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.